சமையல் குறிப்புகள்
நீங்கள் எளிதாய் சமையல் கற்றுக்கொள்ள
Browse through tasty recipes.
Home » » ஹேர்ப் சிக்கன் ஃப்ரை

ஹேர்ப் சிக்கன் ஃப்ரை

Herb Chicken Fry
 
தேவையான பொருட்கள்
சிக்கன் – 500 கிராம்
கொத்தமல்லி இலை – 1 கப்

புதினா இலை – 1 கப்
கறிவேப்பிலை – 1/2 கப் பேக்
பச்சை மிளகாய் – 7
இஞ்சி – 2 டீஸ்பூன் விழுது
பூண்டு – 2 டீஸ்பூன விழுது
தயிர் – 1/2 கப்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/2 கப்
எண்ணெய்
உப்பு
 
செய்முறை
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், ஆகியவற்றை சேர்த்து அடித்துக்கொள்ளவும். மையாக அரைத்ததும் அதனுடன் தயிர் எலுமிச்சை சாறு, உப்பு, கரம் மசாலா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். அத்தோடு செய்து வைத்துள்ள அந்த கலவையுடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து அரிசி மாவு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஊறவிடவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். தற்போது சுவையான ஹேர்ப் சிக்கன் ஃப்ரை தயார்…!
SHARE

About srifm

0 comments :

Post a Comment